Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 20 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, இதனை கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முன்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (21) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் நலன்கள் சார்ந்த விடயங்களுக்காக நான் உள்ளடங்கலான, சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆஜராகவுள்ளோம்.
சட்டத்தரணிகள் மாணவியின் நலன்சார்ந்து நடப்பார்கள் என செவ்வாய்க்கிழமை (19) அறிவிக்கப்பட்ட போதும், புதன்கிழமை (20) நீதிமன்ற வளாகத்தில் நடந்த வேண்டத்தகாத சம்பவங்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
தென்னிலங்கைவாசிகளின் சதிச் செயல்களால் இவ்வாறான அட்டகாசச் செயல்கள் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் உள்ளது.
சமூக நலன்சார் விடயங்களை யாரும் எங்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை. எமது சமூகப் பொறுப்பை நாங்கள் அறிவோம். எந்த அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
இன்று மீண்டும் இராணுவம் வீதிக்கு வந்துள்ளமைக்கு, இன்று நடைபெற்ற அட்டகாச செயல்களே காரணம். எதுவாக இருந்தாலும் எமது இலக்கிலிருந்து விலகிப்போக மாட்டோம்.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கண்ணீரில் ஆழ்ந்திருக்கையில் இன்று நடைபெற்ற இளைஞர்களின் அட்டகாசச் செயல் கவலைக்குரியது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிறு கட்சி பிரமுகர்கள் உள்ளமையை காணமுடிந்துள்ளது. அவர்கள் எமது அலைபேசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களை வெளியில் எடுக்கும்படி கேட்டனர். ஆனால் எந்தச் சட்டத்தரணியும் அதற்கு உடன்படவில்லை. அங்குள்ளவர்களில் அரைவாசிப் பேர் மதுபோதையில் இருந்தனர் என்றார்.
Karththeepan Wednesday, 20 May 2015 03:56 PM
நாம் எல்லாம் எதிர்பார்பது சரியான நீதி, தண்டனை இது போன்ற குற்ற செயலை இனிமேலும் யாரும் மனதாலும் நினைக்காத அளவுக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும்
Reply : 0 0
Ganesalingam Wednesday, 20 May 2015 05:00 PM
We know what happened to poor Consolita.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago