Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 21 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள சாவல்கட்டு சந்தையை, துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்துடன் இணைந்து குத்தகைக்கு விடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.மகேந்திரன் வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.
சாவல்கட்டு சந்தை வசதிகள் குன்றிய நிலையில் சிறிய இடத்தில் இயங்கி வந்தமையால், துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்தை அமைக்க முடியாமல் இருந்தது. சந்தைக்கு அருகிலுள்ள சனசமூக நிலையத்தினர் தமது வளாகத்தில் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்தை அமைத்து வருமானத்தை பெற்று வந்தனர். இதனால் சபைக்கான வருமானம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் பிரதேச சபையின் நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் செலவில் சந்தை புனரமைக்கப்பட்டு வருகின்றது.
சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தை அமைப்பதற்கான நிதியை, பிரதேச சபை நிதிக்குழுவிடம் கோரியது. நிதிக்குழு பரிசீலனை செய்து சிபார்சு செய்தது. இதற்கமைய துவிச்;சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அடுத்த வருடத்திலிருந்து இரண்டும் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
59 minute ago