2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இத்தாலி  செல்ல முயற்சித்த  இளைஞன், கடுநாயக்க பண்டாரநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்  34 வயதுடையவர் எனவும்  யாழ்ப்பாணம், சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்,  கடந்த 18 ஆம் திகதி, போலி கடவுச்சீட்டை வைத்து சவூதி அரேபியாவுக்குச் சென்று வந்துள்ளார் என விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இவர், இந்திய பெண்ணொருவரின் கடவுச்சீட்டினை எடுத்து அவருடைய புகைப்படத்தை ஒட்டி பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரை இன்று நீரகொழும்பு நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார்; மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .