2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கணவாய் பிடித்தவர்களுக்கு அபராதம்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் குழை போட்டு கணவாய் பிடித்த எட்டுப்பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர்களின் நான்கு படகுகளை தடுத்து வைத்த நீதவான், படகுகளின் பதிவுச்சான்றிதழ்களினை உறுதிப்படுத்தி, அதன் அறிக்கையை மன்றுக்கு சமர்பிக்குமாறு யாழ். கடற்றொழில் நீரியல் வளதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி தாழையடி கடற்பகுதியில் சட்டவிரோதமாக குழை போட்டு பிடித்த கணவாய் எட்டுப்பேரை யாழ். கடற்றொழில் நீரியல் வளதுறை அதிகாரிகள் கைது செய்ததுடன் 04 படகுகள் மற்றும் 50 கிலோகிராம் கணவாய் என்பவற்றை பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .