Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 24 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன், ற.றஜீவன்
யாழ். மருதங்கேணி உடுத்துறை பகுதியில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸார் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உடுத்துறை வடக்கு தாளையடியைச் சேர்ந்த வேலன் சிவபாலசுந்தரம் (வயது 52) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
அப் பகுதியில் கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபடும் ஒருவரைக் கைது செய்யும் பொருட்டு, பொலிஸார் சிலர் சனிக்கிழமை (23) இரவு அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
கைது செய்ய வந்த பொலிஸாரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து, அடித்ததுடன், பொலிஸ் வாகனத்தையும் உடைத்து பொலிஸாரைத் துரத்தியுள்ளனர்.
மேலதிக பொலிஸார் மற்றும் ஆயுதங்களுடன் பொலிஸார் மீண்டும் சென்ற போதும், அந்தக் கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதில் பொலிஸார் இழுபறிப்பட்டதில் பொலிஸார் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து வயோபதிபர் படுகாயமடைந்தார்.
தோளில் துப்பாக்கிச்சூடுபட்டதால் படுகாயமடைந்த வயோதிபர், மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பலில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் மருதங்கேணி உபபொலிஸ் நிலையம் இயங்குகின்றது. அந்த உபபொலிஸ் நிலையப் பொலிஸார் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல் வழங்க மறுத்துள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago