2025 ஜூலை 05, சனிக்கிழமை

துஸ்பிரயோகத்துக்குள்ளாகிய சிறுமி நீதிமன்ற உத்தரவுக்கமைய மீட்பு

George   / 2015 மே 27 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 23 வயது இளைஞனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்த 13 வயதுச் சிறுமியொருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (26) மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவதால் குறிப்பிட்ட சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகின்றார். இந்தச் சிறுமிக்கு அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இது தொடர்பில் சிறுமியின் பாட்டி சிறுவர் பாதுகாப்பு சேவையின் அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் இது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சிறுமியை மீட்டு சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய சிறுமி மீட்கப்பட்டு சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். துஸ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .