Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 27 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 24 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு யு.என்.எச்.சி.ஆர் மற்றும் 'ஜெசாக்' நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கிராம அலுவலர் பிரிவில் மீள்குடியமர்வதற்கு 113 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 24 குடும்பங்கள் நிரந்தரமாக குடியமர்வதற்கு ஆயத்தமாகிவருகின்றன. இந்தக் குடும்பங்களுக்கான தற்காலிக வீடுகள் அமைக்கவேண்டிய தேவை காணப்பட்டது. இதனை கருத்திலெடுத்த பிரதேச செயலகம் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுள்ளது.
இந்த தற்காலிக வீடுகள் அமைக்கும் ஆரம்பகட்டப் பணிகள் அந்தப் பகுதி கிராம அலுவலர் தலைமையில் புதன்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.
தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான அத்திபார அளவுத்திட்டம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கியூப் கற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு அத்திபாரம் அமைக்கும் பணியை அந்தக் குடும்பங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேற்கொண்டு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago