2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

Menaka Mookandi   / 2015 மே 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர், அச்சுவேலி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

பகிரங்க பிடியாணையாளர் ஒருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காத பிடியாணையாளர்கள் நால்வருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (26) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .