Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 28 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ். சுன்னாகம் பகுதியில் புதன்கிழமை (27) இரவு இராணுவ பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை பின்னால் சென்ற இராணுவ பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
இதேவேளை. மல்லாகம் பங்களா வீதிக்கு அருகாமையால் புதன்கிழமை (27) இரவு துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை பஸ் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிட்டபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ், துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வயோதிபரை மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்றதும் சாரதி அங்கிருந்தவர்களிடம் இலாவகமாகப் பேசி பஸ்ஸை எடுத்துச் செல்ல முற்பட்ட போதும் அதற்கு பொதுமக்கள் இடமளிக்கவில்லை.
அவ்விடத்துக்கு தெல்லிப்பளை பொலிஸார் சென்று, பஸ் சாரதியை கைது செய்ததுடன், பஸ்ஸையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago