Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 28 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் 200 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கப்பட்டது.
வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடிதங்களை வழங்கினார்.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள பிரதேச, நகர சபைகளில் தற்காலிக ஊழியர்களாக நீண்டகாலம் கடமையாற்றியவர்களுக்கே இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச, நகர சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago