2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உடும்பு, முயல் இறைச்சி வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி காட்டுப் பகுதிக்கு அண்மித்த பகுதியில் முயல் மற்றும் உடும்பு இறைச்சிகளை உடைமையில் வைத்திருந்த இருவருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி காட்டுப்பகுதிக்கு அண்மையில் வியாழக்கிழமை (28) இறைச்சியுடன் நின்றிருந்த இருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, விசாரணை செய்ததில் அவர்களிடம் மேற்படி இறைச்சிகள் இருந்தமை தெரியவந்தது.

இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .