Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மே 30 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஷ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களில் தேசிய நீரியல் வழங்கல் அதிகாரசபையால் தெரிவு செய்யப்பட்ட 02 சங்கங்களுக்கு மானிய அடிப்படையில் மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால் வெள்ளிக்கிழமை (30) கிளிநொச்சி தேசிய நீரியல் வழங்கள் அதிகார சபையின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் இணைப்பு செயலாளர் ப.ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, தேசிய நீரியல் வழங்கல் அதிகார சபையின் மாவட்ட விரிவாக்கல் அதிகாரி எஸ்.சலீபன் ஆகியோரும் கலந்து நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்கினர்.
அத்தோடு பிரதேச செயலக வாரியாக மீன்பிடியாளர்களின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மீன்குஞ்சுகள் வைப்பிலிடல் தொடர்பாகவும் எவ்வாறான மீன்குஞ்சுகள் வைப்பிலிடல் போன்ற விடயங்களை அமைச்சருக்கோ அல்லது தனக்கோ தெரியப்படுத்தும் பட்சத்தில் அவ்வேலைத்திட்டங்களை நடாத்த தாம் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .