2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யாழ். நீதிமன்ற தாக்குதல்: மாணவன் கைது

Thipaan   / 2015 ஜூன் 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவனொருவன் ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட மாணவனின் காற்சட்டை பொக்கற்றில் இருந்து மாவை எனப்படும் இரண்டு போதைப்பொருள் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீடியோ ஆதாரத்தின் உதவியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீடியோ ஆதாரத்தில் இந்த மாணவன் நீதிமன்ற கதவை காலால் தள்ளுவது பதிவாகியுள்ளது.
இந்த மாணவனுடன் மேலும் 8 பேர் ஈடுபட்டிருந்தனர் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

20ஆம் திகதி நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குழப்ப சம்பவத்தில் நீதிமன்ற கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் உடைக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொண்ட வீடியோ விசாரணைகளின் பின்னர் 4 சந்தேகநபர்கள் சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .