2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வளலாயில் 4 கைக்குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2015 ஜூன் 01 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியில் இருந்து 4 கைக்குண்டுகள், ஞாயிற்றுக்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாக இருந்த காணிகள், அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு காணியை துப்பரவு செய்த காணி உரிமையாளர் ஒருவர், தனது காணிக்குள் கைக்குண்டுகள் இருப்பதாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கும் தெரியப்படுத்தினார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் குண்டுகளை மீட்டுச் சென்றனர் என பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .