2025 ஜூலை 05, சனிக்கிழமை

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன: டக்ளஸ்

Sudharshini   / 2015 ஜூன் 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதோடு ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்க இயலாத நிலையில் உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களை இவ்வாறான நிலையில் இருந்து மீட்டு அவற்றை வலுப்படுத்தும் செயற்பாடுகளை மாகாண சபை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் நிலவிய கடந்த காலங்களில் யாழ். மாவட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எமது மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகள் மகத்தானவை. இதனை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

எனினும், இன்று இந்த கூட்டுறவுச் சங்கங்களின் நிலை மிகவும் வேதனைத் தருவதாக அமைந்துள்ளது.
மத்திய அரசில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக நான் பணியாற்றிய காலத்தில், கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். அதுமட்டுமல்லாது, ஏனைய அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்த நிலையிலும் எமது கூட்டுறவுத் துறை வளர்ச்சியிலும் எனது பங்களிப்பு இருந்தே வந்துள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள 24 கூட்டுறவுச் சங்கங்களில் அநேகமானவை பொருளாதார ரீதியில் பெரும் வீழ்ச்சி கண்டவையாகவே உள்ளன.

எனவே, இவற்றை வலுப்படுத்தி, மீளக் கட்டியெழுப்புவதற்கும் மாற்றுத் திட்டங்களின் ஊடாக அவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எமது கூட்டுறவுச் சங்கங்களினதும் அவற்றின் பணியாளர்களினதும் எதிர்காலம் இல்லாது போகக் கூடிய நிலையே உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .