Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 01 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவைடைந்துள்ள நிலையில், அதனை நினைவு கூறும் வகையில் பொதுநூலகம் எரிக்கப்படுவதை அவதானித்ததும் மரணத்தைத் தழுவிக்கொண்ட சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ஹயசிந்த சிங்கராயர் டேவிட் அடிகளார் மற்றும் பொதுநூலகத்தின் தோற்றத்துக்கு காரணமாக இருந்த புத்தூர் சக்கடத்தார் க.மு.செல்லப்பா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுச்சுடர் ஏற்றி திங்கட்கிழமை (01) நினைவு கூரப்பட்டது.
தங்க முகுந்தனால் உருவாக்கப்பட்ட நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவத்தின் உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு என்னும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி சதாசிவமூர்த்தி சுகந்தினி மற்றும் உதவி நூலகர்கள், நூலக ஊழியர்கள், வாசகர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025