2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றத்தில் கலகம் விளைவித்தவர்களில் இருவருக்குப் பிணை

Gavitha   / 2015 ஜூன் 01 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த 20ஆம் திகதி கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர் இருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 3 ஆட்பிணை வழங்கி, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (01) விடுவித்தார்.

நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த 20ஆம் திகதி குழப்பம் விளைவித்து, நீதிமன்ற கட்டட கண்ணாடிகளை உடைத்தமை, வளாகத்திலிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தியமை, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் கண்காணிப்பகத்தை உடைத்தமை மற்றும் சத்திரத்துச் சந்தி வீதிச்சமிக்ஞை விளக்கை உடைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 130 பேருக்கு 4 பிரிவுகளாக விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 47 பேர் திங்கட்கிழமை (01) நீதிமன்றில் மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களில் 2 பேர் பிணையில் விடுவிக்கப்பட, மிகுதி 45 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், இவர்களில் உள்ளடங்கியுள்ள 16 வயதுக்கு மேற்பட்ட 7 பாடசாலை மாணவர்களையும் பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தல் கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பிணை வழங்குவது தொடர்பில் கவனத்தில் எடுக்கப்படும் என நீதவான் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .