Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 03 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் 28 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவ்விபரங்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே, கடந்த காலங்களில் தென்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கும் இதற்கென தனியானதொரு விஷேட பொலிஸ் பிரிவை அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து யாழ், நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோது, யாழில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அதிக குற்றச்சாட்டுக்களை தன்னிடம் முன்வைத்ததாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் கேந்திர இடமாக மாறிவருவதை உணரக்கூடியதாக உள்ளது. இதனை இல்லாதொழிப்பதற்கு இன்றே உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், எமது சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்' என்றார்.
'விஷேட போதைத் தடுப்புப் பிரிவொன்றை அமைத்து, இதனை பலமுள்ளதாக செயற்பட வைத்து, யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் போதைப்பொருள் தொடர்பில் மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சமூக அமைப்புக்களும் முன்வரவேண்டியது அத்தியவசியமாகும். அதற்கானதொரு பொறிமுறையினையும் நாம் உருவாக்க வேண்டும்' என டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
4 hours ago
7 hours ago