Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 03 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் உரிமைகளும் கௌரவமும் பாதிக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் (ஈ.பி.டி.பி) டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தென்னிலங்கையை போன்று எமது பகுதிகளில் வாழும் மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் நாம் அதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை.
கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கூடாகவும் கலந்துரையாடலுக்கூடாகவும் நல்லுறவை வளர்த்துக் கொண்டும் கைகோர்த்து இணைந்து கொண்டு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை குறிப்பாக, அரசியல் உரிமை உள்ளிட்ட வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
எதிர்காலங்களிலும் எமது மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுவதற்கு நாம் எப்போதும் நாம் தயாராகவிருக்கின்றோம்.
'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்ற எமது கட்சியின் கொள்கைக்கேற்பவே கடந்தகாலங்களில் மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.
கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற நல்ல பல வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் தமிழ் தலைமைகள் தவறாக பயன்படுத்தியதன் விளைவே எமது மக்களின் உயிர் உடைமை இழப்புகளுக்கும் அவலங்களுக்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது' என்றார்.
இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago