Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 03 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள சமூகவிரோத மற்றும் சீரழிவுகளைத் தடுப்பதற்கு கிராமங்கள் தோறும் இளைஞர்களைக் கொண்டமைந்த பொலிஸாரின் ஒத்துழைப்புடனான விழிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகம் கூறினார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டிலான ஆர்;ப்பாட்டப் பேரணி பருத்தித்துறையில் புதன்கிழமை (03) நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது, '1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மக்கள் பிரதேசங்களில் இல்லாத சூழ்நிலையில் இவ்வாறான விழிப்புக்குழுக்கள் இயங்கின. அந்தக் காலப்பகுதியில் இவ்வாறான எவ்வித குற்றச்செயல்களும் இடம்பெறவில்லை. ஒவ்வொரு கிராமங்களையும் விழிப்புக்குழு எனப்படும் இளைஞர்கள் அமைப்பு பாதுகாத்து வந்தது. பெண்கள் நள்ளிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.
அவ்வாறான விழிப்புக்குழுக்கள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் போதைப்பொருள் பாவனை, மது பாவனை, கொலை, கொள்ளை, வன்புணர்வு உள்ளிட்ட பலவிடயங்களை இல்லாமல் செய்ய முடியும். விழிப்புக்குழுவுக்கு பொலிஸாரின் உதவியும் பெறப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago