Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஜூன் 07 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன், எஸ்.கர்ணன்
வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா, சனிக்கிழமை (06) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் சனிக்கிழமை (06) தனியார் பஸ்ஸின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசார ஊழியராக கடமையாற்றும் புலோலி தெற்கைச் சேர்ந்த செல்வராசா பிரசன்னா (வயது 38) என்பவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கையில் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் சடுதியாக பிறேக் பிடித்து நிறுத்தியபோது அதன் பின்னால் சென்ற அவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பலத்த காயங்களுக்குள்ளானார்.
உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார் தனியார் பஸ் சாரதியை கைது செய்து பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .