Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 23 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
யாழ்ப்பாணம், மீசாலை மேற்குப் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவரை திங்கட்கிழமை (22) இரவு கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 35 போத்தல் கசிப்பு, 5 பரல் சோடா, கசிப்பு உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில், கசிப்பு காய்ச்சிய வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கசிப்பு மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றினர்.
சந்தேகநபரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
44 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
9 hours ago