Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 25 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஸ்தாபகர் நினைவு தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.மணிசேகரன் தலைமையில் புதன்கிழமை (24) நடைபெற்றது.
தேசிய திட்டமிடல் தினைக்களம் கொள்கை திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி மலர்விழி கங்காதரன் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
கல்லூரி ஸ்தாபகர்களான பாவலர் துரையப்பாப்பிள்ளை மற்றும் அதிபர் ஜெயரெத்தினம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு விருந்தினர்கள் மாலை அணிவித்தனர். வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் பிரித்தானியா நாட்டின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான எம்.தயாளன், விசேட அதிதியாக அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் கல்வி அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் டாக்டர் பி.எஸ்.கணேசலிங்கம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், முன்னாள் அதிபர் வேல் சிவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
44 minute ago
8 hours ago
14 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
14 Aug 2025