2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

3 கிலோ 375 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 06 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் அதே பகுதியினை சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரை கைது செய்ததுடன் கஞ்சாவினையும் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா 8 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 3 கிலோ 375 கிராம் நிறையுடையது எனவும் தெரிவித்தனர். 

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .