Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 06 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன்
மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின் 50ஆவது நிறைவு தின விழாவும் நினைவு மலர் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவா தெரிவித்தார்.
நவபுரம் சனசமூக நிலையத்தின் 50 ஆவது நினைவு மலரை மாவைசேனாதிராஜா வெளியீட்டு வைக்க பண்டாரவளை கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட உதவிப்பணிப்பாளர் எஸ்.மதியழகன் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, நவபுரத்தில் கடந்த காலங்களில் கல்வி, விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக பரிசில்களும் இந்நிகழ்வின் போதுவழங்கி வைக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago