Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருகமூர்த்தி ஆலயம் என்பவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் கொல்லப்பட்ட 147 பேரினுடைய 20ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (09) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருகமூர்த்தி ஆலயத்தில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.
அவர்கள் மீது கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டதுடன் 360 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
இதேவேளை, நவாலி கதிர்காம முருகன் ஆலயத்தில், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் நவாலி கதிர்காம முருகன் ஆலயத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது.
சென்.பீற்றல் தேவாலயம் மற்றும் இந்து ஆலயம் ஆகியவற்றின் மீது விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 147 பேரையும் நினைவு கூர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், நினைவுச் சுடர்கள் ஏற்றி நினைவு கூறப்பட்டது.
48 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago