2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் விஜயம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்கிலியன் தோப்பில் 31ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.

அன்றைய தினம் காலை மன்னாரிலும், மதியம் வவுனியாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .