Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 25 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மண்டைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (24) நள்ளிரவு இரண்டாயிரம் தேர்தல் சுவரொட்டிகளுடன் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சி ஒன்றுக்காக நள்ளிரவு வேளை சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுவரொட்டிகள், பசை, பட்டா ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .