Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 25 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைநகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சுழிபுரம் பகுதியினை சேர்ந்த இருவருக்கு தலா ஒரு இலட்சத்து 85,000 ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதகாலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், வெள்ளிக்கிழமை (24) தீர்ப்பளித்தார்.
காரைநகர் பகுதியில் உள்ள காடு ஒன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கடந்த வாரம் கைது செய்த ஊர்காவற்துறை பொலிஸார், அவர்களிடமிருந்து 200 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்களை பறிமுதல் செய்திருந்தனர்.
சந்தேகநபர்கள், மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (24) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருவரும் தமது குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதவான் அதிகூடிய அபராதம் விதித்துடன் ஆறுமாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .