Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதிக்கு அண்மையிலுள்ள பூவரசம் தீவிலிருந்து விசேட அதிரடிப் படையினர், ஆயுதங்கள் சிலவற்றை செவ்வாய்க்கிழமை (04) மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆயுதங்கள் இப்பகுதிக்கு கொண்டு வந்து அதனை பிரித்து அதற்குள் இருக்கும் மருந்துகளை விற்பனை செய்த கும்பல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தீவில் யாரும் வசிக்கவில்லையெனவும், மீனவர்கள் மீன்பிடித் தேவைகளுக்காக இந்தத் தீவைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுத்த காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்;டங்களில் காணப்படும் ஆயுதங்களை மர்மக் கும்பல் ஒன்று கடத்தி வந்து அதனை இந்தத் தீவில் வைத்து பிரித்து, அதற்குள் இருந்து மருந்துகளை எடுத்து மீனவர்களின் டைனமேட் வெடித் தேவைக்கு விற்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப் படையினருடன் அந்தத் தீவுக்குச் சென்று ஆயுதங்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களை அங்கு வைத்து அழிப்பதற்கான நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .