Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில், வட மாகாணத்துக்கு உள்வாங்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் சிங்களவர்களாகவே காணப்படுவதாகவும் இதன்மூலம் தமிழ் மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஐங்கரநேசனால் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'வடக்கு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம், கடந்த மூன்று தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பில் இருந்து எமது விவசாயிகள் மீண்டெழ முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இந்த பாதிப்புகளை மேலும் அதிகரிக்கும் விதமாக, மத்திய அரசாங்கத்தால் தற்போது வழங்கப்;படவுள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்தில் வடக்கில் 90 விழுக்காடு சிங்கள மக்களே இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் ஓகஸ்ட் 13ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனங்களில், வடக்குக்கான 361பேரில் 332பேர் சிங்களவர்கள் ஆவர். இவர்களில், மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 164பேரும் கிளிநொச்சியில் 41பேர், முல்லைத்தீவில் 53பேர், வவுனியாவில் 40பேர், மன்னாரில் 34பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்ட 29 தமிழர்களில் யாழ்ப்பாணத்தில் 23பேரும், கிளிநொச்சியில் நால்வரும் வவுனியாவில் இருவரும் நியமிக்கப்படவுள்ளனர். முல்லைத்தீவிலும் மன்னாரிலும் ஒரு தமிழரேனும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுப் பரீட்சைக்கு வடக்கில் இருந்து 5,000பேர் வரையில் தோற்றியிருந்தபோதும், 29பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். மிகுதி வெற்றிடங்களை தென்னிலங்கை வாசிகளைக்கொண்டு நிரப்புவதன் மூலம் மத்திய அரசு எமது விவசாயத்துக்குப் பாதகம் செய்திருப்பதோடு மாத்திரம் அல்லாது எமது இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் தட்டிப்பறித்திருக்கிறது' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்க்ப்டப்பட்டுள்ளது.
20 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago