2021 மே 08, சனிக்கிழமை

வீட்டின் கூரையை பிரித்து உள் நுழைந்து நகை, பணம் திருட்டு

George   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வீட்டின் கூரையை பிரித்து உள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்ட 15 பவுண் நகை மற்றும் 17,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் புதன்கிழமை (19) அதிகாலை மல்லாகம் நீதிமன்ற வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள அனைவரும் தூக்கத்தில் இருந்த நேரம் கூரையை பிரித்து நுழைந்த திருடர்கள் 15 பவுண் நகை, மற்றும் 17,000 ரூபாய் பணத்தினை திருடியுள்ளனர்.

வீட்டுக்காரர் அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்த போது திருட்டுபோனமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X