2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

22 கி.கி கஞ்சாவுடன் ஒருவர் கைது

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில், 22 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன், சந்தேகநபர் ஒருவர் இன்று (27) காலை கைது செய்யப்பட்டார் என, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருத்தித்துறைக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, அவர்களின் உதவியுடன், பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அல்வாய் பகுதியைச்சேர்ந்த 53 வயதுடைய குறித்த நபர், மேற்படி 22 கிலோகிராம் கேரள கஞ்சாவை, தமது உடமையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X