Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், என்.ராஜ்
நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டு, அதனை பேஸ்புக்கில் பதிவிட்டாலும் அதுவும் தேர்தல் விதிமுறை மீறல் சம்பவமாகவே கருதப்படுமென, யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில், தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்று (25) வரையான காலப்பகுதியில், ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ள அதேவேளை, தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவெனவும் கூறினார்.
பதிவாகியுள்ள தேர்தல் வன்முறை சம்பவமானது, அண்மையில், தென்மராட்சியில் இடம்பெற்ற தனியார் ஊடக நிறுவன தாக்குதல் சம்பவமெனத் தெரிவித்த அவர், இதனை விட பாரிய சம்பவங்கள் எவையும் இதுவரை பதிவாகவில்லையெனவும் கூறினார்.
தேர்தல் சட்ட விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகற்றப்பட்டுள்ளனவெனவும், அமலராஜ் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago