2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

25 மாணவர்கள் மீது முறைப்பாடு

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று  (13) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகக்கூறி மாணவர்கள் சிலர் போராட்டம் நடாத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X