2025 ஜூலை 02, புதன்கிழமை

30 பவுண் நகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 

யாழ். நாவலர் வீதியிலுள்ள  விற்பனை நிலையமொன்றுக்கு  முன்பாக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 30 பவுண் தங்கநகைகள் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை திருட்டு போயுள்ளதென்று பெண்ணொருவர்  முறைப்பாடு செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர், செம்மணி வீதியைச் சேர்ந்த இப்பெண்  அங்குள்ள விற்பனை நிலையமொன்றுக்குச் சென்றபோது, பையொன்றில் வைக்கப்பட்ட நகைகளை தனது வாகனத்தில்  வைத்துவிட்டு வாகனத்தின் கண்ணாடிகளை மூடாது விட்டுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது,  வாகனத்திலிருந்த  நகைகள் திருட்டுப் போனமை தெரியவந்தது.

சுமார் 10 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டுப் போனதாகவும் இப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .