2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

4 பிள்ளைகளின் தாய் வறுமையால் தீமூட்டி தற்கொலை

Super User   / 2011 மே 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணாத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை தனக்குத் தானே மண்ணெண்னை ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் யாழ். வத்திரிரையான் வடக்கு தாளையடி பிரதேசத்தை சேர்ந்த நித்தியானந்தன் விமலாதேவி (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக இவர் உளத் தாக்கங்களுக்கு உட்பட்டு இருந்ததாக இவரது பிள்ளைகள் பொலிஸ் விசாரணைகளின் போது தொரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் தற்போது யாழ். போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • PILLAI Wednesday, 25 May 2011 08:12 AM

    உலகம் எல்லாம் யாழ் மக்கள். ஆனால் உனக்கோ உணவு இல்லை .

    Reply : 0       0

    xlntgson Wednesday, 25 May 2011 10:47 PM

    கிராம சேவகருக்கும் கட்சி அமைப்பாளர்களுக்கும் மக்களை கண்டு குறை கேட்க நேரம்இல்லை போல் தெரிகிறது!
    வறுமை ஒழிப்பைத் தவிர வேறு எல்லா அனாவசிய நிகழ்ச்சிகள் எல்லாம் எப்போதும் நிகழ்ச்சி நிரலில் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் வேறு எதற்கும் அவர்களுக்கு நேரமில்லை. சீனாவில் ஓர் ஆயிரம் பேருக்கு ஓர் அரச முகவர் துவிச் சக்கர வண்டியில் சுற்றிக்கொண்டு உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா என்று சென்று விசாரித்துக் கொண்டே இருப்பாராம். கோயில், சர்ச், பள்ளிவாயில் என்று இருந்தென்ன. மக்கள் ஒருவரை ஒருவர் சென்று குசலம் கேளாமல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X