2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

40ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

சென். ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் ஆரம்பிக்கப்பட்டு 40ஆவது வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு, அதன் நிகழ்வுகள், யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட ஆணையாளர் எஸ். சேல்வரஞ்சன் தலைமையில், இன்று (28) முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸுக்கான புதிய அறை ஒன்றை  அதன் தலைவர் சரத் சமரகே, மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எமில்வேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதன்பின்னர், கடந்த ஆண்டு சிறந்தமுறையில் அம்பியூலன்ஸ் பாசறையில் பயிற்சி பெற்ற மற்றும் சேவையாற்றிய மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டதுடன், சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தலைவருக்கான சின்னமும் சூட்டப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X