2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

5 வருட விசாரணையின் பின் இன்று தீர்ப்பு

Freelancer   / 2023 நவம்பர் 15 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு எதிராக 2018ம் ஆண்டு, அச்சமயத்தில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய தி.கிருபனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குறித்த வழக்கு மேவதிக நீதவான் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டு விசாரணை கடந்த 05 வருடங்களாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இன்று  தீர்ப்புக்காக வழக்கு திகதி இடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அத்துடன் உணவக உரிமையாளரிற்கு 25,000/= தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X