2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 50 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 50 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா புதுக்கோட்டை, ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 8 படகுகளில் வந்த 30 மீனவர்கள் யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில் கடற் படையினரால் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், இந்தியா புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் பகுதியிலிருந்து ஐந்து படகுகளில் வந்த 20 மீனவர்கள் கடந்த நவம்பர் 20ஆம் திகதி காங்கேசன்துறை கடற் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். மேற்படி 50 மீனவர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த 50 மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .