2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

551 படைப் பிரிவினரின் அதிரடி

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி சக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது.

சக்கோட்டை  கடற்கரையில் படகில் இருந்து கஞ்சாப் பொதியை  இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.

 படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல் காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும்  படகில் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X