2025 மே 15, வியாழக்கிழமை

‘6 வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன’

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றனவெனத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியுமெனவும் கூறினார். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனரெனவும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் தம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளனவெனவும் கூறினார். 

அந்தக் குழுக்களில் உள்ளவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றனவெனவும், அவர் தெரிவித்தார். 

இந்தக் குழுக்களை தாம் புத்தாண்டுக்கு முன்னர் ஒழித்துவிடுவோமெனவும் அதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், மகேஷ் சேனாரட்ன கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .