Freelancer / 2022 ஜூலை 01 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
அச்சுவேலி - யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் தாம் விலகி உள்ளதாக சாரதிகள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் பேருந்து நடத்துனர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி தனியார் பேருந்து சேவையில் 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற பொழுதிலும் தற்போது ஆறு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.
தாம் கோண்டாவில் பேருந்து சாலையில் டீசலை பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கின்ற பொழுதும், தமக்கான டீசல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026