2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

69 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வு

Editorial   / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

இந்தியாவின் 69 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று (26) யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ்.கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணைத்தூதுவர் கொன்சலட் ஜெனரல் ஆறுமுகம் நடராஜன் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா அசாம் மாநிலத்தில் இருந்து வருகை தந்த நடன குழுவினரின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், மதகுருமார்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .