2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

69 ஏக்கர் பற்றைக்காடுகளில் காலபோக செய்கை

George   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் பேராறு கிராமத்தில் நீண்ட காலமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாமல் பற்றைக்காடுகளாக காணப்பட்ட 69 ஏக்கர் நிலம், உலக உணவு ஸ்தாபனத்தின் ஊடாக துப்பரவு செய்யப்பட்டு, காலபோக பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒட்டிசுட்டான் கமநல அபிவிருத்தி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி கிராமத்தில் 182 ஏக்கர் நிலம் நீண்டகாலமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் பற்றை மண்டிய நிலையில் காணப்பட்டதுடன், காணி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய அவற்றில் 69 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக இவ்வருடம் துப்பரவு செய்யப்பட்டது.

துப்பரவு செய்தமையை அடுத்து கணேசபுரம், வித்தியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 28 குடும்பங்கள் இந்த பகுதியில் இவ்வருடம் காலபோக பயிர் செய்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

மிகுதி காணிகளையும் விரைவில் துப்பரவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கமநல சேவை திணைக்கள தகவல்;கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .