2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

8 தேங்காய்கள் திருட்டு; 8 நாள்கள் விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி பகுதியில் 8 தேங்காய்களைத் திருட்டுத்தனமாகப் பறித்தவரை 8 நாள்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று நேற்று (08) உத்தரவிட்டுள்ளது.

மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களைத் திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதனையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .