Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
இரவு வேளைகளில் சில்லறைக் கடைகளினுள் திருட்டுத்தனமாகப் புகுந்து பொருட்களை கொள்ளையிட்டு வந்த நபரொருவரை மாதம்பை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரது இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு துணை புரிந்த மற்றொருவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மாதம்பை பொலிஸ் நிலையத்தின் குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி டீ. டீ. ஆனந்த தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடந்த எட்டு மாதங்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், சுமார் மூன்று இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளக்ர்.
கொள்ளையிடப்பட்ட பால்மா வகைகள், பட்டர், மீன்டின்கள், அரிசி, சவர்க்காரம் போன்ற பொருட்களை தனது வீட்டுத் தேவைகளுக்கு எடுத்துவிட்டு ஏனையவற்றை வேறொருவர் மூலமாக வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பாணந்துறையிலுள்ள வீடொன்றில் 16 பவுண் தங்கநகைகளைக் கொள்ளையிட்டு அதனை கண்டியிலுள்ள வங்கியில் அடகு வைத்த விடயமும் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சிலாபம் பிரதேச குற்றத்தடுப்பு நடவடிக்கைப் பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.தயாரத்னவின் மேற்பார்வையில், மாதம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.சீ.ஜே.இந்திரஜித் தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .