2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

நுகர்வோர் மேற்பார்வை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்ட செயலகத்திலுள்ள நுகர்வோர் மேற்பார்வை  அதிகாரிகளின்    கடமைக்கு இடையூறு  விளைவித்ததாக கூறப்படும்  ஹோட்டல் உரிமையாளர் உட்பட நான்கு தொழிலாளருக்கு எதிராக முந்தல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸ்  தொகுதி  பிரிவுக்குட்பட்ட  பத்துளுஓயா தாராவில்லு பகுதியிலுள்ள ஹோட்டலொன்றை   நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  நுகர்வோர் மேற்பார்வை  அதிகாரிகள்  பரிசோதனை   செய்ய முற்பட்டபோது, உரிமையாளர் உட்பட அங்கு கடமை புரியும் நான்கு  தொழிலாளிகள்  தமது  கடமைக்கு இடையூறு விளைவித்து தம்மை    தாக்கியதாகவும்  முந்தல்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து   ஹோட்டல் உரிமையாளரும்  தொழிலாளார்களும் முந்தல்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .