2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஆசியாவின் ஆட்சி மண்டலமாக புதிய சகாப்தத்துக்கான கதவை திறந்துள்ள இலங்கை

Menaka Mookandi   / 2011 மார்ச் 31 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மததுல்லா)

அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின்  பட்டியலிலுள்ள 41 நாடுகளின் வரிசையில் இலங்கை 19ஆவது இடத்தில் இருப்பதாகவும், அதனை 10ஆவது இடத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள புள்ளியினை அதிகரிப்பதற்காக வர்த்தகம், நிதி மற்றும் சுதந்திரமான முதலீடுகள் குறித்து கவனம் செலத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்துள்ள 12 பேரடங்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு குழுவினரை சினமன்ட் லேக் கார்டன் ஹோட்டலில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'கடந்த மூன்று தசாப்தமாக இலங்கை பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை சந்தித்தது. இன்று அந்த நிலை மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம்இ புதிய வரலாற்று பாதையினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச வர்த்தக முதலீட்டாளர்களின் வருகை மிகவும் முக்கியமானதாக கருதுகின்றேன்.

முன்னைய காலங்களை விடஇ தற்போது இலங்கை பற்றிய சர்வதேச பார்வை, புதிய முதலீட்டாளர்களையும் வர்த்தக சமூகத்தினரையும் வரச் செய்துள்ளது.  இலங்கை ஆசியாவின் ஆட்சி மண்டலமாக புதிய சகாப்தத்துக்கான கதவை திறந்துள்ளது. அதேவேளை தமது நோக்கத்தை அடைந்து கொள்ளும் சர்வதேச திறணையும் கொணடுள்ளது.

அதேவேளை கவர்சியூட்டக் கூடிய பேரெண்ணிக்கை கொண்டு அளவீடுகளை மேலும் அதிகரிக்க செய்யும். நிதி நிர்வாகம்இ தொழிற் கல்வி நிபுணத்துவம்இ சிறந்த சந்தை வாய்ப்புஇ வணிகத் தொடர்புகள் போன்றவற்றின் மையமாக இலங்கை இன்று விளங்குகின்றது.

இலங்கை அரசாங்கமானது நாட்டில் பாரியளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவிப்பதிலும்இ மீள் கட்டியெழுப்புவதிலும்இ போட்டித் தன்மையை பாதுகாப்பதிலும்இ பூகோள மைய்ய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையானது ஐக்கிய அமெரிக்கவுடனான உறவை உச்ச நிலையில் பாதுகாத்து வருகின்றது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை இலங்கையில் உள்வாங்குவது சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம். இரு நாடுகளுக்குமான வர்த்தக உறவுகளுக்கு பிரதான தரப்பாக இந்த உயர்மட்ட பிரதி நிதிகள் காணப்பட வேண்டும் என்று தமது வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், ஏற்கனவே பலமான அத்திவாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் புதிய பொருளாதார பயணத்தை முன்னெடுக்க தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .