2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

மிதிவெடியில் அகப்பட்ட யானைகள்

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

மிதிவெடியில் அகப்பட்டு கால் மற்றும் தும்பிக்கை ஆகியவை பாதிக்கப்பட்ட இரண்டு காட்டு யானைகள் சிலாபத்துறை மரிச்சுக்கட்டு வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு யானைகளும் நேற்று வியாழக்கிழமை வீதி ஓரத்திற்கு வந்து ஒதுங்கி நின்றுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினர் இந்த யானைகள் இரண்டும் மிதிவெடியில் சிக்கியிருப்பதை அவதானித்தனர். இதனையடுத்து குறித்த வனவிலங்கு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அந்த யானைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக முதலில் யானைகளுக்கு மயக்க ஊசி ஏற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X